BrowseAtWork.com:   [ UP ]   [Manage cookies]

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கட்டற்ற கலைக்களஞ்சியம். நீங்களும் தொகுக்கலாம்.
தமிழ்க் கட்டுரைகள்: 21,619


முதற்பக்கக் கட்டுரைகள்

Madurai Sulthanate Coin2.jpg

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி பாண்டிய நாட்டில் கி.பி. 1142ஆம் ஆண்டு துவங்கியதாக அறியப்பட்டாலும் அதற்கு முன்னரே மக்களிடையே இசுலாம் பரவியிருந்தது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாசுகர ரவிவர்மா என்பவரின் காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது. பின் இது தமிழக பகுதிகளிலும் பரவியது. இதே சமயத்தில் வியாபார நோக்கத்தோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் முகாமிட்டன. இவர்கள் மூலமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்கமாகி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இசுலாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்ப்பட்டன.


RetroTranscription.jpg

ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும்.இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.

மேலும் கட்டுரைகள்..

உங்களுக்குத் தெரியுமா?

தோல் பாவைக்கூத்திற்குத் தயாராகும் கலைஞர்
  • தமிழகத்தின் மரபுக்கலைளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும் ( படம் ) நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
  • கடலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  • நிலநடுக்கத்தால் மாபெரும் பாதிப்பிற்குள்ளான ஹெய்ட்டி மக்களுக்கு உதவுவதற்காக வீ ஆர் த வோர்ல்ட் 25 ஃபார் ஹெய்ட்டி என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Kampala Kasubi Tombs.jpg

விக்கிப்பீடியர் அறிமுகம்

தேனி எம்.சுப்பிரமணி
தேனி எம்.சுப்பிரமணி, டிசம்பர் 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இதழியலில் ஆர்வம் மிக்கவர். ஸ்ரீ நாராயணகுரு, தேனி மாவட்டம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சொத்து வரி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், கண்ணகி கோயில், இந்தியச் சரணாலயங்கள், தொழிலாளர்களுக்கான மீதூதியம், ஹென்றி பவர் ஐயர் முதலிய பல தலைப்புகளில் முதன்மையாகப் பங்களித்திருக்கிறார். இவர் எழுதியுள்ள தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

இன்று...

Einstein2.jpg

மார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்

சிறப்புப் படம்

{{{texttitle}}}

யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர் உசேன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை படைத்த சில நொடிகளில் எடுத்தப் படம். அவரது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் படத்தில் காணலாம். இந்த ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தார்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.1984ஆம் ஆண்டு கால் லூயிசிற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக் விளையாட்டில் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்ற தடகள ஆட்டக்காரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. முன்னதாக 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார்.


தொகுப்பு


Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிபீடியா வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

உங்கள் கருத்துக்கள் | பிற மொழி விக்கிபீடியாக்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்